கட்டுப்பாடுகளின்றி தமிழ்நாட்டில் மாசுபாடு – தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை அனல் மின் நிலையங்களின் உமிழ்வு விதிமுறைகளின் இணக்கம் குறித்த ஆய்வு, 2021 ஒரு ஒழுங்குமுறை விரிசலை வெளிப்படுத்துகிறது.
4 மார்ச் 2023, சென்னை: ஆரோக்கியமான எரிசக்தி முன்முயற்சியின் (Healthy Energy Initiative – India) அறிக்கை, தமிழ்நாட்டில் உள்ள பதினொன்று பொதுத்துறை அனல் மின் நிலையங்களில் (TPPs) எதுவும் கண்காணிப்புத் தேவைகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அமைத்த உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் நான்கு முக்கிய நிலக்கரி அனல் மின் நிலைய பகுதிகளில் (திருவள்ளூர், நெய்வேலி, தூத்துக்குடி மற்றும் மேட்டூர்) TPPகள் 2021 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைகளை மீறுவதாகவும், 53% வரை உமிழ்வு விதிமுறைகளை மீறுவதாகவும் கண்டறியப்பட்டது. இது ஒரு ஒழுங்குமுறை கருந்துளையை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பதினொன்று பொதுத்துறை TPP களின் ஒரு வருட தொடர்ச்சியான உமிழ்வு தரவுகளை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. ஆய்வு செய்யப்பட்ட பதினொன்றில் ஒன்பது TPPகள் TNPCB ஆல் நிர்ணயம் செய்யப்பட்ட உமிழ்வு விதிமுறைகளை மீறுவதாகும். உதாரணமாக, வட சென்னை NTPC தமிழ்நாடு எனர்ஜி கம்பெனி லிமிடெட்டில் இருந்து சல்பர் டை ஆக்சைடு (SO2) உமிழ்வுகள் தரவு நேரத்தைப் பொறுத்தமட்டில் 92% (அலகு 1) TNPCB நிர்ணயித்த உமிழ்வு வரம்புகளை விட அதிகமாக இருந்தது. SO2 உமிழ்வுகள் தொண்டை, மூக்கு குழாய் மற்றும் நுரையீரல் எரிச்சல் மற்றும் தற்போதுள்ள சுவாச நோய்களை குறிப்பாக ஆஸ்துமாவை மோசமாக்கலாம்.
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை II லிருந்து (NCTPS- stage II) நுண்துகள் (PM) உமிழ்வுகள் (புகைபோக்கி 2) – 2021 இல் தரவு நேரத்தைப் பொறுத்தமட்டில் 78% TNPCB நிர்ணயித்த வரம்புகளை மீறியது. PM க்கு வெளிப்பாடு நுரையீரல் செயல்பாடு குறைவதற்கும், இருதய மற்றும் சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் நோய் முன்னேற்றத்தின் அதிகரித்த விகிதம் மற்றும் ஆயுட்காலம் குறைப்பிற்க்கும் வழிவகுக்கும். இந்த ஆபத்தான மீறல் காலங்கள் TPPகளின் உமிழ்வு விதிமுறைகளை தொடர்ந்து புறக்கணிப்பதையும், TNPCB ஆல் அதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கையின் தோல்வியையும் அம்பலப்படுத்துகிறது. TNPCB இல் தொடர்ச்சியான உமிழ்வு கண்காணிப்பு தரவுகள் இருந்த போதிலும் இது நடந்தது.
2021 ஆம் ஆண்டில் 2% முதல் 100% வரையிலான பல்வேறு காலகட்டங்களுக்கான உமிழ்வைக் கண்காணிக்க அனைத்து பதினொரு TPPகளும் தவறிவிட்டன. உதாரணமாக, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2021 இல் 100% நேரம் PM (அலகு 1) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) (அலகு 4) உமிழ்வுகள் இரண்டிற்கும்- “தரவு இல்லை”. இதன் பொருள், ஆண்டு முழுவதும் இந்த மாசுபாடுகள் அனைத்தையும் கண்காணிப்பதில்லை. “தரவு இல்லை” என்பது தரவு இல்லாதது மற்றும் TPP களில் இருந்து உமிழ்வைக் கண்காணிக்க ஒழுங்குமுறை அமைப்புகளால் அர்ப்பணிப்பு இல்லாததைக் காட்டுகிறது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில்- இனி புதிய நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள் தொடங்கப்படாது என்று உறுதியளித்தது. எனினும் நிலக்கரியை எரிக்கும் காலநிலை மாற்ற மூலதனங்களாக இருக்கும் TPPகளிலிருந்து காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு TN காலநிலை மாற்ற இயக்கம் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்துவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை TNPCB இன் இந்த ஒழுங்குமுறை தடைகள் காட்டுகிறது என்று துர்கா மூர்த்தி, ஆரோக்கியமான எரிசக்தி முன்முயற்சி-இந்தியா கூறினார்.
“2021 தேதியிட்ட சுகாதார ஆய்வின் மூலம் TN இல் உள்ள அனல் மின்நிலைய பகுதிகளில் ஒன்றான எண்ணூரைச் சுற்றி வாழும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுவாசக் கோளாறுகள் அதிகமாக உள்ளன என்ற உண்மையை நிறுவியதற்க்கு மத்தியில், TPP மாசுபாட்டின் உடல்நல பாதிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. சுவாச நோய் தவிர, இருதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களின் அகால மரணம் ஆகியவை நுண்துகள்கள் உமிழ்வால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் சில. ஒழுங்குமுறை அமைப்புகளால் உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்துவதில் தோல்வி, தொழிற்சாலைகளுக்கு மாசுபடுத்துவதற்கான அனுமதியை வழங்குவதாகும், மேலும் இது சுகாதார சீர்கேட்டிற்கு எளிதான கூக்குரல்” என்று ஆரோக்கியமான எரிசக்தி முன்முயற்சி-இந்தியாவின் டாக்டர் விஸ்வஜா சம்பத் கூறினார்.
மேலும் தகவலுக்கு: 9384687523 | 9629505983
முழு அறிக்கையை இங்கே படிக்கவும்: https://hei-india.in/permit-to-pollute-2021/
தமிழில் அறிக்கை சுருக்கத்தை இங்கே படிக்கவும்: https://bit.ly/tpp_tamil_summary